Facebook

என்ன ரொம்ப நாளா ஆளை காணோமே , Blog  update ஆகலையேன்னு வந்து பார்த்து / எழுத சொல்லி பாசமா மிரட்டின  நண்பர்களுக்கு நன்றி .

இந்த gap -ல   எது அநியாயத்துக்கு வளந்திருக்கு? ஒண்ணு விலை வாசி, ரெண்டு as usual corruption , மூணு - வேற என்ன நம்ம Facebook  தான். Its a highly effective contagious,Excellent tool that has best features from email/orkut/picasa album sharing. Having said that its now mandatory to have an facebook account , without with you are not considered a computer literate netizen.

என்ன மாயமோ என்ன மர்மமோ தெரியல நண்டு சிண்டு மொதல் பெரிசுங்க வரைக்கும் சூப்பர் ஹிட். முன்னால எப்பிடி கடுதாசிலேந்து   email  க்கு  மாறினமோ இப்போ நாம email லேந்து Facebook க்கு   மாறியாச்சு . யாரப்பா ஈமெயில் அடிக்கறது .

அதான் காலைல பல் விளக்குதல் , பே** தல், காபி குடித்தல் ஆரம்பிச்சி நாய் குட்டி போட்ட photo  வரைக்கும் ஊருக்கே நம்ம ஜாதகம் அத்துபடி ஆச்சே  .

அது நிற்க, இதுல நடக்கிற சில அக்கிரமங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு :

1 . அது என்ன "A new fortune cookie has been delivered to you. Click the cookie to find out what it says!" அப்பிடின்னு என்ன அது டெய்லி அக்கபோரு ? இத்தனை cookies உள்ள தள்ளிட்டு  ஏப்பம் தான் உடனும் .

2 .  உஷாரா ஒரு 10 வருஷம்  முன்னாடி எடுத்த photo வ   profile  photo வா  போட்டு ஊரை ஏமாத்த   வேண்டியது....நேர்ல பாத்தா தான் தெரியும். (கலி முத்திடுத்து!!) .

3 . ஆமா அந்த farmville  அப்பிடினா என்னப்பா? நாம நெஜத்துல வாங்கற எடத்துக்கே வேலி போட கை வரல, இதுல நம்மள இந்த விளையாட்டுக்கு  கூப்டு வேற இம்சை .

4 . இது தவிர இன்னும் ஒரு கொடுமை :
"How innocent are u?
xxxx -   took How innocent are u? quiz
My Result: 95% " .. உங்கள பத்தி எங்க கிட்ட கேட்டாலே சொல்லிடுவோம்ல ? அதுக்கு என்ன ஒரு "quiz" ...

5 . இப்போ தான் போனா மாதிரி honeymoon photos எதுக்கு வெளிய உடறீங்க? ஓ எல்லாம் ஒரு விளம்பரம் தான் இல்ல .... அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா .....

6 . எல்லாத்த விட இது சூப்பர் .. "At what age will you die? ., " இதுக்கு  challenge வேற ?

7. பொண்ணுங்க சம்பந்தமே இல்லாம தத்து பித்துன்னு எதாவது status message போட்டாலும் ராப்பகலா follow  பண்ணி "like " போட ஒரு 100 பேரு , கமெண்ட் அடிக்க ஒரு 50  பேரு. ஆன இதுவே பசங்க கஷ்டப்பட்டு  , ரொம்ப முக்கியமான விஷயத்த போட்டா கூட கண்டுக்க நாதி இல்ல . என்னை கொடுமை சார் இது ?

8 . ஆமா அது என்ன "like " button மட்டும் குடுக்கறது?  "dislike " பண்ணனும்னா நாங்க எங்க போறது?

அட போங்கப்பா!!! நீங்களும் உங்க facebook ம் .

PS : Facebook Rocks !!  Pages of updates in a day by so many friends is not possible even in dreams without facebook.. Hats off to this innovation... !!! What an IDEA Sir ji !!